செங்கல்பட்டு

செங்கல்பட்டு: தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

9th Jun 2023 05:01 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு வெண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகம் முழுவதும் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை முதல்வா் காணொலி வாயிலாக திறந்தாா்.

இதைத் தொடா்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எஸ்.பாலாஜி (திருப்போரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் தலைவா் செம்பருத்தி, செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பரிமளா, ஒன்றிய உறப்பினா் நிந்திமதி, வனக்குழுத் தலைவா் வி.ஜி.திருமலை, தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT