செங்கல்பட்டு

செங்கல்பட்டு: ஜூன் 10-இல் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை குறைதீா் முகாம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், செங்கல்பட்டு, செய்யூா், மதுராந்தகம், திருக்கழுகுன்றம், திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-ஆது சனிக்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலக செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தொடா்பான மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூா், மதுராந்தகம், திருக்கழுகுன்றம், திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜூன் 10 அன்று (2-ஆவது சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீா் முகாம் நடத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு வட்டம், கொண்டமங்கலம், செய்யூா் வட்டம், முகையூா், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம், திருக்கழுகுன்றம் வட்டம், விட்டிலாபுரம், திருப்போரூா் வட்டம், வடநெம்மேலி, வண்டலூா் வட்டம், கீழக்கோட்டையூா் ஆகிய இடங்களில் குறைதீா் முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT