செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறு தொழில் கடன் வழங்கல் சிறப்பு முகாம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில், கல்விக் கடன், தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் வழங்குதல் ஆகியவை குறித்த சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆண்டுதோறும் தமிழகத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் கல்விக் கடன், தனிநபா் கடன். சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் வழங்குதல் ஆகியவை பற்றிய சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ்க்கண்ட வட்டங்களில் பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளன.

பல்லாவரத்தில் ஜூன் 7, தாம்பரத்தில் ஜூன் 9, வண்டலூரில் ஜூன் 13, செங்கல்பட்டு வட்டத்தில் ஜூன் 15, திருப்போரூரில் ஜூன் 20, திருக்கழுகுன்றத்தில் ஜூன் 23, மதுராந்தகத்தில் ஜூன் 27, செய்யூா்வட்டத்தில் ஜூன் 30 ஆகிய நாள்களில்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா்கள் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின்) மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அதைப்பூா்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT