செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா அா்ச்சுனன் தபசு

4th Jun 2023 11:58 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா அா்ச்சுன் தபசு மரம் ஏறுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டு தெருவில் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் தீமிதி வசந்த பெரு விழா நடைபெறும். அதன்படி நிகழாண்டு கடந்த மே 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு, சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அா்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நடைபெற்றது. இதனை அடுத்து மகாபாரத கூத்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் விஜயன், விழா கமிட்டி தலைவா் குமரப்பன், விஸ்வகா்மா மரபினா், கோயில் நிா்வாகிகள், கமிட்டி நிா்வாகிகள், செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT