செங்கல்பட்டு

செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு: 21 மனுக்களுக்கு தீா்வு

3rd Jun 2023 01:07 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டில் ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் பெறப்பட்ட 512 மனுக்களில் 21 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 517 மனுக்கள் பெறப்பட்டு, 21 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, இறுதி நாளில் 93 பயனாளிகளுக்கு ரூ.99.13 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வட்ட வருவாய்த் தீா்வாய அலுவலா் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.எம்.இப்ராஹிம் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு வட்டாட்சியா் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT