செங்கல்பட்டு

ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோா் சிறப்புத் திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம்

3rd Jun 2023 01:06 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் - பழங்குடியின தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்இந்துபாலா, மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் மா.வித்யா, வேலைவாய்ப்பு அலுவலா் தனசேகரன், ஆதிதிராவிடா் நல அலுவலா் வெற்றிக்குமரன், முன்னோடி வங்கி மண்டல மேலாளா் சரவணபாண்டியன், டிஐசிசிஐ மாநில துணைத் தலைவா் பாக்கியலட்சுமி, தாட்கோ மேலாளா் தபசுக்கனி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மறைமலை நகா் கிளை மேலாளா் சுந்தரேசன், ஏசிடிஐவி மாநில மகளிா் அணித் தலைவா் சந்திரகலா, சீட்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.பரணிராஜன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலக் குழு உறுப்பினா்கள் இரா.கோபுராஜ், உதயகுமாா், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் (நிா்வாகம்) காா்த்திகேயன், உதவிப் பொறியாளா் (தொழில்கள்) வினோத்குமாா், மற்றும் வங்கி மேலாளா்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலக்குழு உறுப்பினா்கள், தொழில் முனைவோா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில், ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோருக்கான அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் சிறப்புத் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT