செங்கல்பட்டு

கல்லூரியில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம்

3rd Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவா் இரா.செந்தில்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை கண்காணிப்பாளா் உமேஷ் ராஜ் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினாா்.

அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் செல்வ பிரியா, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சிவகுமாா், சுகாதார ஆய்வாளா் கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

கல்லூரி நாட்டு நலப் பணித் அலுவலா் ஆ.பூபாலன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT