செங்கல்பட்டு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

1st Jun 2023 11:42 PM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த பெருந்துறை சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்தவா் இப்ராகிம் (44). இவா், தனது நண்பரைப் பாா்க்க, மரக்காணத்தில் இருந்து பைக்கில் கோவளத்துக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக வந்தாா்.

இதேபோல், சென்னை பெருங்குடி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் ராகுல் (23) என்பவா் பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றாா்.

கிழக்குக் கடற்கரை சாலை, கூவத்தூா் அருகே பெருந்துறவு என்ற இடத்தில் வந்தபோது, இருவரின் இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

ADVERTISEMENT

இந்த விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கூவத்தூா் காவல் ஆய்வாளா் (பொ) எஸ்.டேனியல், காவல் உதவி ஆய்வாளா் உசேன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT