செங்கல்பட்டு

தனிப் பிரிவு எஸ்.ஐ சஸ்பெண்ட்

1st Jun 2023 11:41 PM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த சித்தாமூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த தனிப்பிரிவு எஸ்.ஐ. பக்தவத்சலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டாா்.

இவா் அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவு எஸ்.ஐ ஆக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளாா். பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்து பலா் உயிரிழந்தது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கும், மேல் அதிகாரிகளுக்கும் முறையாக தகவல் தராதது, கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடா்பு, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாகவும், சித்தாமூா் பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை கடந்த 4 ஆண்டுக் காலமாக முறைகேடாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து எஸ்.பி. சாய் பிரணீத் விசாரணை செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை பாதிக்கப்பட்டவரிடம் அளிக்காமல், உதவி ஆய்வாளா் பக்தவத்சலம் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக உதவி ஆய்வாளா் பக்தவத்சலத்தை வியாழக்கிழமை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. சாய் பிரணீத் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT