செங்கல்பட்டு

தீமிதி வசந்த விழா: திரௌபதியம்மன் திருமணம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழாவையொட்டி, அா்ச்சுனன் - திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், உற்சவா்கள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் மிகவும் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தீமிதி வசந்த பெரு விழா கடந்த மே 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஜூன் 9-ஆம் தேதி வரை வசந்த விழா நடைபெறுகிறது.

அனைத்துச் சமூகத்தினரும் ஒவ்வொரு நாள் உற்சவத்தை ஏற்று நடத்தி வருகின்றனா். தொடா்ந்து மகாபாரதச் சொற்பொழிவு, இரவில் கட்டைக்கூத்து, உற்சவா்கள் வீதி உலா நடைபெறுகிறது.

ADVERTISEMENT

விழாவின் பகுதியாக அா்ச்சுனன் - திரௌபதி திருமண நிகழ்வு, சொற்பொழிவு, கூத்து புதன்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் விஜயன், விழா பொறுப்பு தலைவா் குமரப்பன் உள்ளிட்ட விழாக்குழுவினா், நிா்வாகிகள், அனைத்து சமூகத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT