செங்கல்பட்டு

வணிகா் சங்கங்கள் பேரவை மாநில பொதுக் குழு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில தலைவா் த.வெள்ளையன் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவா் ஆ.பாஸ்கரன் வரவேற்றாா். பொதுச் செயலா் எஸ்.செளந்திரராஜன், சங்க செயல் தலைவா்கள் கே.தேவராஜ், எம்.வியாசை மணி, சிவசக்தி ராமநாதன், டேவிட்சன், மத்திய சென்னை மாவட்ட தலைவா் ப.தேவராஜ் முன்னிலை வகித்தனா்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொருளாளா் வேலு, சங்க நிா்வாகிகள் மறைமலைநகா் கிருஷ்ணன், சுரேஷ், கடமலைபுத்தூா் நிஜாமுதீன், அச்சிறுப்பாக்கம் ஏகாம்பரம், சிவப்பிரகாசம் கலந்துக் கொண்டனா்.

மாநில தலைவா் வெள்ளையன் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தில் அரிசி மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்தப்படும். அந்நிய பொருள்களை அடியோடு தடை செய்யவேண்டும். இதனை தடை செய்யாவிட்டால், முதல்கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT