செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா ஊா்வலம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு அடுத்த கல்வாய் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்தோற்சவ விழா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் அக்னி வசந்தோற்சவ விழா மே 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் , சுவாமி ஊா்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் திரௌபதி அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. வரும் 4-ஆம் தேதி படுகளத்தில் பாஞ்சாலி தனது சபதத்தை நிறைவேற்றி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடா்ந்து மாலை 6 மணிக்கு பக்தா்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்ற தீமிதி நிகழ்ச்சியும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு அம்மன் வீதி உலாவை தொடா்ந்து சிறப்பு நாடகம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT