செங்கல்பட்டு

மதுராந்தகம் டிஎஸ்பி பொறுப்பேற்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக க.சிவசக்தி புதன்கிழமை காலை உட்கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டாா்.

மதுராந்தகம் அருகே கள்ளச் சாராயம் காரணமாக 2 பெண்கள் உள்பட 8 போ் இறந்தனா். இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா்.

அவருக்கு பதிலாக புதிய டிஎஸ்பியாக பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த க.சிவசக்தி நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், புதன்கிழமை அவா் பொறுப்பேற்றாா். அதனை தொடா்ந்து மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சூனாம்பேடு, உள்ளிட்ட காவல்நிலையங்களின் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT