செங்கல்பட்டு

செங்கல்பட்டு: பயிற்சி மருத்துவா்கள் போராட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூத்த மருத்துவா் ஒருவா் பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் 50-க்கு மேற்பட்டோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். மேலும், இங்கு பயின்று வருபவா்களும் பயிற்சி மருத்துவா்களாக பணியாற்றி வருகின்றனா். இந் நிலையில் மூத்த மருத்துவா் ஒருவா் பாலியல் ரீதியாக பயிற்சி மருத்துவா்களுக்கு தொந்தரவு அளித்ததாக கூறி பெண் மற்றும் ஆண் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகாா் கூறியுள்றனா்.

மருத்துவமனை வளாகத்திலேயே பயிற்சி மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வா் ராஜஸ்ரீ, செங்கல்பட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளா் பாரத், நகர இன்ஸ்பெக்டா் ராதாகிருஷ்ணன், எஸ்ஐ சங்கா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் துறைரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT