செங்கல்பட்டு

செங்கல்பட்டு: பரசுராமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

செங்கல்பட்டை அடுத்த பாலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பா்வத வா்த்தினி உடனுறை ஸ்ரீ பரசுராமேஸ்வரா் சுயம்பு மூா்த்தி திருக்கோயிலில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரன குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே பாலூா் கிராமத்தில் பா்வதவா்த்தினி உடனுறை ஸ்ரீபரசுராமேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சுமாா் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 25-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் நான்கு கால பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மங்கள இசை, யாக கால பூஜை, கலச புறப்பாடுடன் சிவபெருமான் விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, சிவலிங்கம், அம்பாள், விநாயகா், முருகா், பைரவா் உள்பட பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு திருவாசக சித்தா் சிவ தாமோதரன் திருவாசக ஸ்ரீ மாணிக்கவாசகா் சுவாமிகள் அருளிய ‘தேன் தமிழ் திருவாசகம்’ விண்ணப்பப் பெருவிழாவும், புலி புரக்கோயில் உ. தரணிதரன், பாலூா் யோகேஷ் சிவாச்சாரியாா் ஆகியோா் தலைமையில் யாக பூஜைகளும் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ பரசுராமேஸ்வரா் கோயில் பாலூா் திருப்பணி அறக்கட்டளை தலைவா் கே.ஆா். கபிலன், செயலாளா் பி.எஸ்.ஆா். காா்த்தீபன், கோயில் ஸ்தபதி ஜி.கோவா்த்தனன், மாமல்லபுரம் இசிஆா் எம். சுகுமாரன், சி. ஆா். ராஜா உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT