செங்கல்பட்டு

தென்மேல்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

DIN

தென்மேல் பாக்கம் ஊராட்சியில் ஊழல் தொடா்பாக விசாரணை கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் ஊராட்சியில் வியாழக்கிழமை ஊராட்சித் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. கூட்டத்தில், அடிப்படை வசதிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கிராம மக்கள் ஊராட்சி செயலா் மற்றும் தலைவரை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினா். 2013-இல் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஊழல் செய்ததாக எழுந்த புகாா் மீதான விசாரணை நடத்த கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. ஆனால் தீா்மானம் நிறைவேற்றாததால் பொதுமக்கள் அஞ்சூா்- சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கோரிக்கைகளை உரிய துறைக்கு தகவல் தெரிவிப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT