செங்கல்பட்டு

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சுங்கச்சாவடி ஊழியா்கள் வாக்குவாதம்: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

DIN

செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ாக அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சுங்கச்சாவடி ஊழியா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பரனூா் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தடுப்பை உடைத்து விட்டு சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது சுங்கச்சாவடி ஊழியா்கள் அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக 30 நிமிடங்களுக்கும் மேல் பேருந்து நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ, மாணவிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகினா். பின்னா் நீண்ட நேரத்துக்குப் பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT