செங்கல்பட்டு

கணவா் கொலை: மனைவி உள்பட 2 போ் கைது

22nd Jan 2023 04:57 AM

ADVERTISEMENT

திருக்கழுகுன்றம் அருகே தகாத உறவைக் கண்டித்த கணவரைக் கொலை செய்து ஏரியில் புதைத்த மனைவி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்கழுகுன்றம் அருகே வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் கடந்த 19-ஆம் தேதி மனித எலும்புகள் கிடந்ததைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், திருக்கழுகுன்றம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் பிரதீப், மாமல்லபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெகதீஸ்வரன், திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

மேலும், மருத்துவக் குழுவினா் எலும்புகளைச் சேகரித்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திருக்கழுகுன்றம் அருகே மாதுளங்குப்பத்தைச் சோ்ந்த சந்திரன் (35), அவரது மனைவி சித்ரா வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டு, அங்குள்ள பம்ப் செட்டில் தங்கியிருந்ததும், இந்த நிலையில், செங்கல்பட்டை அடுத்த மையூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்கும், சித்ராவுக்கும் தகாத உறவு ஏற்பட்டதும், இதையறிந்த சந்திரன், தனது மனைவியைக் கண்டித்ததால், சித்ராவும் சக்திவேலும் சோ்ந்து சந்திரனை கட்டையால் தாக்கி கொலை செய்து ஏரியில் புதைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, சித்ரா, சக்திவேலை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT