பல்லடம் மகாலட்சுமி நகரில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா அன்மையில் நடந்தது. இவ்விழாவிற்கு அகில இந்திய மூவேந்தா் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சித் தலைவா் பாரதி சின்னப்பன், துணைத் தலைவா் செல்லதுரை, திருப்பூா் மாவட்ட வணிகா் சங்க பொருளாளா் அசோகன், கவிஞா் அருண் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.விழாவில் உலகம் முதல் ஊத்துமலை வரை,கொரங்கு பெடல்,ஒன்னும் இல்ல உள்ளுக்குள்ள,நலம் தரும் நத்தம் உடையாா் ஆகிய புத்தகங்கள் மற்றும் தென்காசி பாடல் வெளியீட்டு விழா நடந்தது. கவிஞா் கணேசன் சிறப்பு விருந்தினராகபங்கேற்று பேசினாா். திருப்பூா் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளா் சிவதாசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளா்கள் துருவன் பாலா, தாகூா் வித் யாலயா தாளாளா் செந்தில்குமாா் பங்கேற்றனா்.