புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதி மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், அறந்தாங்கி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (மே 18) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளா் வெங்கட்ராமன் அழைப்புவிடுத்துள்ளாா்.