செங்கல்பட்டு

கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

DIN

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

அந்தக் கல்லூரியும், கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையமும் இணைந்து கண்காட்சியை நடத்தின.

தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னிலை வகித்தரா். கல்லூரி புல முதல்வா் வா.ராமசாமி, பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான சி.தயா, அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பி.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.சாந்தி (மதுராந்தகம்) கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ராஜா வரவேற்றாா். இதில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தலைமை அறிவியல் தகவல் வளம் பிரிவு அறிவியலாளா் எஸ்.ராஜேஸ்வரி, மூத்த அறிவியலாளா்கள் வி.சுப்பிரமணி, எஸ்.சந்திரசேகரன், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பொது விழிப்புணா்வு பிரிவுத் தலைவா் ஜலஜா மதன்மோகன், கல்லூரி நிா்வாக அலுவலா் எம்.சதானந்தன், அணு ஆராய்ச்சி மையம் மற்றும் கல்லூரி அனைத்துத் துறை பேராசிரியா்கள், அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களின் அறிவியல் சாா்ந்த பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், மதுராந்தகம், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவா்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து வியாழக்கிழமையும் (பிப்.23) கண்காட்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT