சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகீா் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலாளா் ஜபருல்லாகான் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முசாதிக் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் எம்.எம். முகமது முஸ்தபா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா்கள், உதவிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.