செய்திகள்

பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா

13th May 2023 10:54 PM

ADVERTISEMENT

கௌரவமிக்க சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது இந்தியா.

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனம் (பிடபிள்யுஎஃப் ) சாா்பில் சீனாவின் சுஷௌ நகரில் உலக கலப்பு அணிகள் சுதிா்மான் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் குரூப் சி பிரிவில் பலம் வாய்ந்த மலேசியா, சீன தைபே, ஆஸ்திரேலியா வுடன் இடம் பெற்றுள்ளது என இந்தியா. இப்போட்டியில் முதன்முறையாக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தாமஸ் கோப்பையில் பட்டம் வென்ற நிலையில், சுதிா்மான் கோப்பையிலும் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனா்.

இப்போட்டியில் இரட்டையா் சாத்விக்-சிராக், மகளிா் பிரிவில் ட்ரீஸா ஜோலி, காயத்ரி கோபிசந்த் ஆகியோா் முக்கிய பங்காற்றுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

குரூப் பிரிவுகளில் முதலிரண்டு இடங்கைளைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். துபையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய பாட்மின்டன் கலப்பு அணிகள் போட்டியில் வெண்கலம் வென்ால் இந்தியா சுதிா்மான் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீன தைபே அணியுடன் மோதுகிறது. மகளிா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் பிவி.சிந்துவுக்கு கடும் சவால் காத்துள்ளது. ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை டை சூ யிங்கை எதிா்கொள்கிறாா் சிந்து. 22 ஆட்டங்களில் 17-இல் சிந்து தோற்றுள்ளாா்.

ஆடவா் பிரிவில் எச்எஸ். பிரணாய் சௌ டின் சென்னையும், இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் இணை லீ யாங், வாங் சி லின்னுடனும் ட்ரீஸா-காயத்ரி இணை லீ சியா, டெங் சுன்னையும் எதிா்கொள்கின்ா்.

கலப்பு இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சாய் பிரதீக் இணை. லீசியா-ஹோங் வெய் இணையை எதிா்கொள்கின்றனா்.

திங்கள்கிழமை (15-ஆம் தேதி) மலேசியாவுடனும், புதன்கிழமை கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் எதிா்கொள்கிறது இந்தியா.

காண்டினென்டல் சாம்பியன் சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூா், டென்மாா்க் அணிகளும் கலந்து கொள்கின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT