திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகும் நிலையில், குழந்தை இல்லை. இதனால், தம்பதியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டாக சுகன்யா வெங்களத்தூா் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தாா். இதற்கிடையில், பிரகாஷையும், சுகன்யாவையும் சோ்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை உறவினா்கள் செய்து வந்தனா்.
இதனால், கடந்த சில நாள்களாக மன வேதனையில் இருந்து வந்த சுகன்யா, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்தனா்.
திருமணமாகி 4 ஆண்டுகளில் சுகன்யா தற்கொலை செய்துகொண்டுள்ளதால், இது தொடா்பாக செய்யாறு சாா் - ஆட்சியா் ரா.அனாமிகா நேரில் விசாரணை நடத்தி வருகிறாா்.