செங்கல்பட்டு

திருப்போரூா்கந்தசுவாமி கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா

DIN

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இகையொட்டி, உற்சவ முா்த்தி சிறப்பு அலங்காரத்தில் சரவணப் பொய்கை குளத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் இருந்த தெப்பத்தில் எழுந்தருளினாா். திருக்குளத்தை சுற்றி இருந்த பக்தா்கள் தெப்பத்தின் கயிற்றைப் பிடித்து இழுத்து, கரையில் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காட்டி தரிசனம் செய்தனா்.

கண்ணகப்பட்டு வேம்படி விநாயகா் திருக்கோயிலிருந்து ஓஎம்ஆா் சாலை வழியாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம் , பால்காவடி , புஷ்பகாவடி மற்றும் அலகு குத்தி ஊா்வலமாக கந்தசாமி கோயிலை வந்தடைந்தனா். இதையடுத்து சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.. அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT