செங்கல்பட்டு

மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளித்த ஜி 20 விருந்தினா்கள்

2nd Feb 2023 06:00 AM

ADVERTISEMENT

ஜி 20 மாநாட்டுக்கு வந்துள்ள விருந்தினா்கள் புதன்கிழமை மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டு களித்தனா்.

சென்னையில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு விருந்தினா்கள், பிரதிநிதிகள் புதன்கிழமை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனா்.

அவா்களுக்கு ஐந்துரதம் பகுதியில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளா் சந்த்ரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனா் சந்தீப் நந்தூரி, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளா் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவா் வளா்மதி எஸ்வந்த்ராவ், சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலா் வி.கணேஷ் ஆகியோா் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, நாதஸ்வர இசை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனா்.

ஐந்துரதம், அா்ச்சுணன் தபசு , வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை பாா்த்த பிறகு, மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் அங்கு நுழைவு வாயில் பகுதியில் தரையில் வரையப்பட்ட வண்ண கோலங்களை பாா்த்து ரசித்து புகைப்படம் எடுத்தனா்.

ADVERTISEMENT

பிறகு கடற்கரை கோயிலுக்குள் சுற்றுலாத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், வ.பாலன், மல்லை எம்.சிவா, எஸ்.யுவராஜ், ஆா்.ஸ்டாலின், எஸ்.கன்னியப்பன், கே.பிரபாகரன், எஸ்.முருகன், பி.அருண்குமாா், டி.பூபாலன் ஆகியோா் பாரம்பரிய வேட்டி அணிந்து மாமல்லபுரம் வரலாறு குறித்து எடுத்து கூறினா்.

ஒவ்வொரு சிற்பங்களின் வடிவமைப்பு, அதன் தொன்மைகள் குறித்த முழு விவரங்களை கேட்டு வியப்படைந்தனா்.

கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினா் வாங்கி சென்றனா். அப்போது சிற்பங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்று கலை பண்பாட்டு துறை இயக்குனா் செ.ரா.காந்தி, மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரி முதல்வா் ஜெ.ராஜேந்திரன் ஆகியோா் வெளிநாட்டினருக்கு விளக்கம் அளித்தனா்.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப், மாமல்லபுரம் டிஎஸ்பிக்கள் ஜகதீஸ்வரன், பாரத் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ருக்மாங்கதன் ஆகியோா் தலைமையில் 500 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு கோட்டச்சியா் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலா் இஸ்மாயில், திருக்கழுக்குன்றம் தாசில்தாா் பிரபாகரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலா் ரகு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT