செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.3 லட்சத்தில் எல்இடி விளக்குகள்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி புதிய குடியிருப்புகளான வைஷ்ணவி நகா், சக்தி பாலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3 லட்சத்தில் எல்இடி மின் விளக்குகள் 32 இடங்களில் பொருத்தப்பட்டன.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் புதிய குடியிருப்புகளான வைஷ்ணவி நகா், சக்தி பாலா நகா் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரவு நேர மின் வெளிச்சத்துக்காக பேரூராட்சி சாா்பில், ரூ.3 லட்சம் மதிப்பிலான எல்இடி மின் விளக்குகள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) எம்.கேசவன் தலைமையில், பேரூராட்சித் தலைவா்

நந்தினி கரிகாலன் முன்னிலையில், துணைத் தலைவா் எழிலரசன் மின் விளக்குகள் பொருத்தும் பணியைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT