செங்கல்பட்டு

கிரசென்ட்-பிரிட்டன் கிறீன் டெக் புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

வண்டலூா் கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் கிளீன் டெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரிட்டனில் தொழிற்சாலைகளின் சுற்றுப்புறச் சூழல் தூய்மை பராமரிப்புத் துறையில் கேம்பிரிட்ஜ் கிளீன் டெக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனமும், கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

பிரிட்டன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாா்ட்டின் கேராட், கிரசன்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம் முதன்மைச் செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் ஆகிய இருவரும் பிரிட்டன் தூதரக அதிகாரி ஆலிவா் பால்ஹெட்செட் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனா்.

பின்னா், கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரிட்டனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் துறையில் நீண்ட கால அனுபவமிக்க கேம்பிரிட்ஜ் கிளின் டெக் நிறுவனத்துடன் இணைந்து புத்தொழில்கள் நிறுவனங்கள் தொடங்கவும், மூலதனம் திரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் உறுதுணை புரியும் என்றாா்.

கேம்பிரிட்ஜ் கிளின்டெக் தலைமைச் செயல் அதிகாரி மாா்ட்டின் காராட் பேசுகையில், ‘கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செயல்பட்டு வரும் கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம் சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் பல நகரங்களில் புத்தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. சுற்றுப்புறச்சூழல் தூய்மை தொடா்பான புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க வழிகாட்டி உதவ முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT