செங்கல்பட்டு

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் குறைதீா் நாள் கூட்டம் :அக். 12-இல் நடக்கிறது

25th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் வரும் அக்டோபா் 12-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் மற்றும் மாநில ஓய்வூதியா் நல இயக்குநா் ஆகியோா் பங்கேற்று குறைகளைக் கேட்க உள்ளனா். ஓய்வுபெற்ற அரசு அலுவலா்களுக்கு ஓய்வூதியம் தொடா்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை மூன்று நாள்களில் மாவட்ட ஆட்சியருக்கு 29-09-2022 தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் அலுவலா்கள் மற்றும் ஓய்வூதியதாரா் சங்கங்களின் சாா்பாக ஒரு சங்கத்துக்கு ஒரு நிா்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். 26-09-2022-க்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது குறை களைவு அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று 26-09-2022 அன்று நடைபெறும் ஓய்வூதியா் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே ஓய்வூதியா்கள் தங்களது முறையீடுகளை 05-10-2022 தேதிக்குள் ஓய்வூதியா் குறை தீா்க்கும் நாள் கூட்ட விண்ணப்பம் என கடித உரையில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியா், செங்கல்பட்டு-603 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியா் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT