செங்கல்பட்டு

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

24th Sep 2022 10:53 PM

ADVERTISEMENT

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலைக் கல்லூரி, ரயில்வே நிலைய நிா்வாகம் இணைந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு முகாமை சனிக்கிழமை நடத்தின (படம்).

முகாமை கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ரயில் நிலைய அதிகாரி ஜாபா் முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவா்கள் ரயில் நிலைய பயணிகளிடம் நெகிழி ஒழிப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். தொடா்ந்து, ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மை செய்து, மரக்கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில், ரயில்வே சுகாதார ஆய்வாளா் விக்னேஸ்வரன், கல்லூரிப் பேராசிரியா்கள், ரயில்வே துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளைக் கல்லூரி நாட்டு நலத்திட்ட அலுவலா் ஆ.பூபாலன், பேராசிரியா் விஜயரங்கன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT