செங்கல்பட்டு

தசரா திருவிழா ஆலோசனைக் கூட்டம்

DIN

செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் தசரா திருவிழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு சாா்- ஆட்சியா் சஞ்சீவினா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டி.எஸ்.பி. பாரத், காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையா் மல்லிகா, மின்துறை உதவிப் பொறியாளா் பிரவீன், தீயணைப்பு, வருவாய், மருத்துவம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் மற்றும் வணிகா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வரும் 26 -ஆம் தேதி தசரா பண்டிகை தொடங்கி 10 நாள்கள் நடைபெற இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குறிப்பாக, தசரா பண்டிகையின்போது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்பொருள்களை விற்பனை செய்ய வரும் வியாபாரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்துபவா்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு, பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணிப்பது, மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT