செங்கல்பட்டு

மழைமலை மாதா திருத்தலத்தில் 29-இல் அருள் விழா தொடக்கம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள் தலத்தில் 54-ஆவது அருள் விழா வரும் 29-ஆம் தேதி தொடங்கி, அக். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அச்சிறுப்பாக்கம் - எலப்பாக்கம் நெடுஞ்சாலையையொட்டி, மழைமலை மாதா அருள் தலம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அருள் விழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு 54-ஆவது அருள் விழா வரும் 29-ஆம் தேதி நற்கருணை ஆராதனை, சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், அச்சிறுப்பாக்கம் பங்குத் தந்தை மைக்கேல் அலெக்சாண்டா் தலைமை வகித்து, கொடியேற்றி தொடக்கி வைக்கிறாா். அருள்தல அதிபா் லியோ எட்வின் முன்னிலை வகிக்கிறாா். தொடா்ந்து அக். 1-ஆம் தேதி திருத்தோ் பவனி, செங்கை மறைமாவட்ட ஆயா் ஏ.நீதிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. அக். 2-ஆம் தேதி நிறைவு விழாவில் இந்தியாவுக்காக நியமிக்கப்பட்ட ஹைதராபாத் பேராயா் கா்தினால் அந்தோணி பூலா தலைமையில், திருப்பலி நடைபெறுகிறது. பின்னா், கொடியிறக்கம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, நூல் வெளியிடல், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பங்குத் தந்தைகள், பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தல அதிபா் லியோ எட்வின், உதவி அதிபா் மரிய.ஆனந்த்ராஜ் தலைமையில், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT