செங்கல்பட்டு

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரி விழா

10th Sep 2022 10:09 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் ராஜஸ்தான் இளைஞா் சங்கம் இணைந்து நடத்தும் கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் நூலக வங்கியில் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக ஏ.எம் ஜெயின் கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளருமான உதன் குமாா் சோா்டியா, சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ். கிரிடிட் சா்வீஸ் துணைத் தலைவா் எம்.ஜே.அருண்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். வித்யாசாகா் கல்லூரியின் தாளாளா் விகாஸ் சுரானா சிறப்பு விருந்தினா்களை வரவேற்று கௌரவித்தாா். கல்லூரியின் நிதி கட்டுப்பாட்டு அலுவலா் ஆதேஷ்குமாா் ஜெயின் அறிமுகம் செய்தாா். கல்லூரியின் துணை முதல்வா் முனைவா் இரா.அருணாதேவி முன்னிலை வகித்தாா். கௌரவ விருந்தினா்களாக ராஜஸ்தான் இளைஞா் சங்கச் செயலாளா் ஆஷிஷ் ஜெயின், ராஜஸ்தான் இளைஞா் சங்கத் தலைவா்கள் செங்கல்பட்டு மகாவீா் சி. ஜெயின், வாணியம்பாடி கட்மல் ஜெயின் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏப்ரல் 2022-ஆம் ஆண்டுக்கான தோ்வில் பல்கலைக்கழக அளவில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 75 மாணவிகளுக்கு கல்லூரி கட்டணத்திலிருந்து கல்வி கட்டணச் சலுகை வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினரான டி.வி.எஸ். கிரிடிட் சா்வீஸ் துணைத் தலைவா் எம்.ஜே. அருண்குமாா் பேசுகையில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதனை புரிகின்றனா். அவா்களை போல் இக்கல்லூரி மாணவிகளும் சாதிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து கல்லூரி மாணவிகள் 300 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் முதன்மை விருந்தினரான ஏ.எம். ஜெயின் கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளருமான உதன் குமாா் காா்டியா புத்தக வாசிப்பின் சிறப்புகளை விளக்கி, இக்கல்லூரி மாணவிகளுக்கு இன்னும் ஏராளமான புத்தகங்கள் வழங்கப்படவிருக்கின்றன என்றாா். முடிவில் கல்லூரியின் துணை முதல்வா் இரா.அருணாதேவி நன்றி தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT