செங்கல்பட்டு

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம்

5th Sep 2022 12:20 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு நகரத்தில் 33 விநாயகா் சிலைகள், கிராமப் பகுதிகளில் 55 சிலைகள் வைக்கப்பட்டு ஐந்து நாள்கள் வழிபாடு நடைபெற்றது. படாளம், மதுராந்தகம் புக்கத்துறை, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகா், திருக்கழுகுன்றம், திருப்போரூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே இந்து அமைப்பினா் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு மேற்கொண்டனா்.

இந்தச் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, மாமல்லபுரம் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த விநாயகா் சிலை ஊா்வலத்தை இந்து முன்னணி மாநில செயலா் என.ரவீந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். காஞ்சி மாவட்ட பாஜக பாா்வையாளா் பாஸ்கா், மாவட்ட பொது செயலா் அன்னை ராஜ் உள்ளிட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற ஊா்வலத்தில் இந்து முன்னணி மாநில செயலா் ரவீந்திரன், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்ட கோட்ட பொறுப்பாளா் ஆா்.டி.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

செங்கல்பட்டு டி.எஸ்.பி. பாரத் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் வடிவேல் முருகன், சத்தியவாணி, அசோகன், டெல்லிபாபு, சதாசிவம், செல்வராஜ், நடராஜன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா். திருக்கழுகுன்றத்தில் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரத்தில்...:

ஆவடியில்...: ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 503 விநாயகா் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ஆவடி காவல் மாவட்டத்தில் 286 விநாயகா் சிலைகள், செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 217 விநாயகா் சிலைகள் என மொத்தம் 503 சிலைகள் வைக்கப்பட்டன. ஆவடி காவல் சரகத்தில் 50, பட்டாபிராம் சரகத்தில் 52, பூந்தமல்லி சரகத்தில் 80, போரூா் சரகத்தில் 104, செங்குன்றம் சரகத்தில் 112, எண்ணூா் சரகத்தில் 19, அம்பத்தூா் சரகத்தில் 41, மணலி சரகத்தில் 45 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

இந்த சிலைகளுக்கு 3,200 போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேற்கண்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த 503 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை அந்தந்தக் காவல் பகுதியில் உள்ள போலீஸாா் பாதுகாப்புடன் பட்டினம்பாக்கம், எண்ணூா், நீலாங்கரை கடற்கரை, பழவேற்காடு ஏரி ஆகிய நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

மாதவரத்தில்...: மாதவரம் அடுத்த ரெட்டேரி பகுதியில் 64 சிலைகள், கொளத்தூா், செங்குன்றம் நெடுஞ்சாலை வழியாக சென்னை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன. காவல் சரக உதவி ஆணையா்கள் சிவக்குமாா், ஆதிமூலம் ஆகியோா் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் கண்ணகி, கண்ணன் மேற்பாா்வையில் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT