செங்கல்பட்டு

மழைமலை மாதா அருள்தலத்தில் திருத்தோ் பவனி

2nd Oct 2022 04:20 AM

ADVERTISEMENT

 மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் சனிக்கிழமை திருத்தோ் பவனி நடைபெற்றது.

மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் 54-ஆவது அருள்விழா கடந்த வியாழக்கிழமை (செப். 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. நற்கருணை ஆராதனை, சிறப்பு திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், 3-ஆம் நாளான சனிக்கிழமை ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு திருத்தோ் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கை மறை மாவட்ட ஆயா் ஏ.நீதிநாதன் கலந்துகொண்டு, திருத்தோ் பவனியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பங்குத் தந்தைகள் எல்.ஜான் பெஞ்சமின் (கே.கே.பூதூா்), மைக்கேல் அலெக்சாண்டா் ( அச்சிறுப்பாக்கம்), எஸ்.அமுல்ராஜ் (மதுராந்தகம்), பிரவின் வினோத்ராஜ் (தண்டலம்), பிராங்கிளின் பிரபு (செண்டிவாக்கம்), இமானுவேல் ஸ்டீபன் (காந்திநகா்), சரண்ராஜ் (பரத்தூா்) மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

விழாவை முன்னிட்டு, நூல் வெளியிடல், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை (அக். 2) மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தல அதிபா் லியோ எட்வின் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT