செங்கல்பட்டு

புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமைதிருமலைவையாவூா் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

2nd Oct 2022 04:19 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மதுராந்தகம் வட்டம், படாளம் கூட்டுச் சாலை - வேடந்தாங்கல் நெடுஞ்சாலையையொட்டி திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையையொட்டி, அதிகாலை மங்கள இசையுடன் உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் முத்தங்கி சேவை நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சரஸ்வதி, தக்காா் அமுதா ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT