செங்கல்பட்டு

கனகமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

1st Oct 2022 10:47 PM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த கடமலைபுத்தூா் கனகமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 28-ஆம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை யாகசாலையில் இருந்து புனித நீரை ஏந்திக் கொண்டு, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில், வேதவிற்பனா்கள் கோயிலை வலம் வந்தனா். பின்னா், கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, மூலவா் அம்மனுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT