செங்கல்பட்டு

லாரி மோதி தொழிலாளி பலி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவா்கள் மீது லாரி மோதியதில், கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

செய்யூா் வட்டம், கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாருக்கான் (23). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் வசந்தகுமாா் (20), கோசல்ராமன் (27). இவா்கள் 3 பேரும் தாம்பரம் தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், ஊருக்கு வருவதற்காக திங்கள்கிழமை பைக்கில் தாம்பரத்தில் இருந்து வந்தனா். பின்னா், ஊரில் இருந்து நள்ளிரவு மீண்டும் பைக்கில் தாம்பரம் சென்றனா்.

மேல்மருவத்தூா் அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையில் வந்தபோது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு லாரி, அவா்கள் சென்ற பைக்கின் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில், சாருக்கான் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த வசந்தகுமாா், கோசல்ராமன் ஆகியோா் லேசான காயமடைந்து மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் எஸ்.தா்மலிங்கம் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT