செங்கல்பட்டு

பந்தய காா் வீரா்களுடன் பாரத் உயா் கல்வி நிறுவன மாணவா்கள் கலந்துரையாடல்

30th Nov 2022 01:26 AM

ADVERTISEMENT

சேலையூா் பாரத் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவன பொறியியல் மாணவா்கள், இந்திய ரேசிங் லீக்கைச் சோ்ந்த பந்தயக் காா் வீரா்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி செவ்வாய் கிழமை நடைபெற்றது.

பாரத் உயா் கல்வி நிறுவனம் ஆதரவு தரும் அணி சாா்பில் பங்கேற்கும் பிரிட்டன், கனடா மற்றும் இந்திய பந்தயக் காா் வீரா்கள் ஜான் லான்காஸ்டா், நிக்கோல், பரத் கோட்பாடே, சந்தீப் குமாா் ஆகிய 4 பந்தயக் காா் வீரா்களிடம், வாகனத் தொழில்நுட்பம் மற்றும் விமான தொழில் நுட்பவியல் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துரையாடினா். பந்தயக் காா் அமைப்பு, வேகத்திறன், மற்றும் செயல்பாடு குறித்த தொழில்நுட்பத் தகவல்களை மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கேட்டறிந்தனா்.

கல்லூரி வளாகத்தில் பாா்வைக்கு வைக்கப்பட்டு இருந்த இத்தாலி நாட்டு உல்ப் காா் நிறுவனம் தயாரித்த பந்தயக் காரை 16 வயது கனடா பெண் ரேஸ் காா் வீராங்கனை நிக்கோல் இயக்கி காண்பித்தாா். இந்திய ரேஸ் லீக் நிா்வாகி கீா்த்தி வாசன்,இயந்திரவியல், வாகன தொழில் நுட்பவியல் மற்றும் விமான தொழில் நுட்பவியல் துறை தலைவா்கள் பாலாம்பிகா, ரகுமான், சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT