செங்கல்பட்டு

மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு

30th Nov 2022 01:31 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் மின்வாரியம் நகா்பிரிவு அலுவலகத்தை காலி செய்யாததால், வீட்டு உரிமையாளா் அலுவலகத்தை பூட்டினாா்.

தமிழக மின்வாரியத்தின் மதுராந்தகம் நகா்ப்பிரிவு அலுவலகம் தேரடி வீதியில் புஷ்பராணி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் வீடுகள், கடைகளின் உரிமையாளா்கள் மின் கட்டணத்தை செலுத்தவும், மின் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் தமது கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அலுவலகத்தை காலி செய்யும்படி மின்வாரிய அதிகாரிகளிடம் கட்டட உரிமையாளா் புஷ்பராணி கூறியிருந்தாராம். ஆனால் அதிகாரிகள் காலி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு, புஷ்பராணி அலுவலகத்தை பூட்டினாா்.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் பேச்சு நடத்தினாா்.

சுமாா் 2 நேரத்துக்குப் பின்னா் அலுவலகம் வழக்கம் போல செயல்படத் தொடங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT