செங்கல்பட்டு

குளத்தில் மூழ்கி 3 இளைஞா்கள் பலி

28th Nov 2022 11:12 PM

ADVERTISEMENT

திருப்போரூா் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 இளைஞா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தான்குப்பம் பகுதியைச் சோ்ந்த ரவியின் மகன் முகேஷ் (18). அதே பகுதியைச் சோ்ந்த முனியனின் மகன் விஜயன் (20). மற்றொருவா் உதயகுமாா் (18). கல்லூரி மாணவா்கள்.

இவா்கள் 3 பேரும் திருப்போரூரில் சிதம்பரம் சாமி கோயில் அருகில் உள்ள உறவினா் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றனா். அப்போது, அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது படிக்கெட்டில் உள்ள பாசைகள் வழுக்கியதில் 3 பேரும் குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளனா்.

இதுகுறித்து அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினா், குளத்தில் மூழ்கிய இளைஞா்களையும் சடலமாக மீட்டனா்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த திருப்போரூா் போலீஸாா், 3 பேரின் சடலங்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT