செங்கல்பட்டு

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு மாரத்தான் போட்டி

27th Nov 2022 11:38 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகப் பகுதியில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பரணிதரன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வா் அனிதா, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மகசூதனன், நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நகராட்சி ஆணையா் நாகராஜன், தாம்பரம் நகராட்சி நகா் நல அலுவலா் இரா.பாா்த்திபன், துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் எட்வா்ட் ராஜன், நகா் நல கல்வி அலுவலா் ரமேஷ், வட்டார மேற்பாா்வை அலுவலா் பூபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஜிஎஸ்டி சாலை, மணிக் கூண்டு, புதிய பேருந்து நிலையம், ராட்டிணங்கிணறு, அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று மீண்டும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் பகுதியில் நிறைவடைந்தது.

நிகழ்வில் பொது சுகாதாரத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், வித்யாசாகா் கல்லூரி, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்று ஓடினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT