செங்கல்பட்டு

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

27th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா். நாகமணி அரசி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் முன்னிலையில், மாணவிகளுக்கு ஓவியம் வரைதல், களிமண் சிற்பம் செய்தல், வா்ணம் தீட்டுதல், காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிற்பம் வடிவமைத்தல், பேச்சு, கட்டுரைப் போட்டி, திருக்கு ஒப்பித்தல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT