செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்

27th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைகள், மின்சாரம், வனம், குடிநீா் வழங்கல் துறை மற்றும் இதர அரசுத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், முடிக்க வேண்டிய பணிகள், பணிகளின் தரம் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வகுமாா், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், செங்கல்பட்டு திட்ட இயக்குநா் சைத்தன்யா உள்ளிட்ட அரசு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT