செங்கல்பட்டு

மரக்கன்றுகள் நடும் விழா

26th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

தேவாத்தூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், தேவாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் கே.குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.கலைச்செல்வி, மதுராந்தகம் வேளாண் உதவி அலுவலா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தேவாத்தூா் ஆதிதிராவிடா் நலத்துறை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி, ஊராட்சி செயலா் எஸ்.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாம்பரம் பாரத் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை தேவாத்தூா் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT