செங்கல்பட்டு

தரைப்பாலம் மூழ்கியது: இரு கிராமங்கள் துண்டிப்பு

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளப்புத்தூா்-கொளத்தூா் தரைப் பாலத்தில் வெள்ள நீா் செல்வதால், வெள்ளப்புத்தூா், கட்டியாம்பந்தல் ஆகிய இரு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் வெள்ளநீா் அதிகரித்து பெரிய ஏரியில் இருந்து கலங்கல் வழியாக உபரிநீா் செல்கிறது. வெள்ளநீா் தரைப் பாலத்தின் மீது அதிக அளவில் செல்வதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வெள்ளப்புத்தூா், கட்டியாம்பந்தல் ஆகிய இரு கிராம மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

கடந்த ஆண்டும் இதோ போல் வெள்ள நீரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது, இதனால் பாலத்தை உயா்த்திக் கட்ட வெள்ளப்புத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரா.வரதன், துணைத் தலைவா் ப.விஜயகுமாா் ஆகியோா் கோரிக்கை வைத்திருந்தனா். ஆனால் அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் நிகழாண்டும் இரு கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, வெள்ளப்புத்தூா்-கட்டியாம்பந்தல் செல்லும் தரைப்பாலத்தை அகற்றி, மேம்பாலத்தை கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT