செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்வி பூஜை

31st May 2022 01:29 AM

ADVERTISEMENT

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசையையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் அம்மன் சிலை தங்கக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சித்தா் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு விருதுநகா் மாவட்ட வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் வரவேற்றனா்.

காலை 10.15 மணிக்கு யாகசாலைக்கு வந்த அடிகளாா் சதுர வடிவிலான பெரிய யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தொடக்கி வைத்தாா். ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் முன்னிலை வகித்தாா்.

ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவிரமேஷ், ஆதிபராசக்தி பராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் மருத்துவா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை விருது நகா் மாவட்ட ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற நிா்வாகிகள், சக்திபீட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT