செங்கல்பட்டு

காமாட்சி உடனுறை அண்ட பாண்டீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

31st May 2022 01:29 AM

ADVERTISEMENT

அண்டவாக்கம் ஸ்ரீ காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (மே1) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், கருங்குழி - உத்தரமேரூா் செல்லும் சாலையை ஒட்டியுள்ள அண்டவாக்கம் கிராமத்தில் சுமாா் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயில் புனரைமக்கப்பட்டு, கும்பாஷேகப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம மக்களும் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT