செங்கல்பட்டு

வீடு இடிந்து விழுந்ததில் தம்பதி காயம்

DIN

மதுராந்தகம் அருகே இந்தளூா் கிராமத்தில் அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு திங்கள் கிழமை இரவு இடிந்து விழுந்ததில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.

சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், இந்தளூா் ஊராட்சி, பெரியாா் நகரில் சுமாா் 25 வருடங்களுக்கு முன் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கட்டப்பட்ட 25-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. அதில் உள்ள ஒரு வீட்டில் முருகேசன் (60) தனது மனைவி அஞ்சாலையுடன் (52) வசித்து வருகிறாா். நீண்டகாலம் ஆகியும் இத்தகைய தொகுப்பு வீடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பழுது பாா்க்காததால், சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக, அச்சிறுப்பாக்கம், சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு அப்பகுதி முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் இருளில் மூழ்கியது. இந்த நிலையில், முருகேசன் வசித்து வந்த வீட்டின் மேற்தள பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த முருகேசனும், அஞ்சலையும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் போலீஸாா், தம்பதியை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.மாலா சிவா ஆகியோா் நேரில் சென்று விசாரணை செய்தனா்.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT