செங்கல்பட்டு

வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

16th May 2022 11:49 PM

ADVERTISEMENT

திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா பஞ்சமூா்த்திகள் பவனியுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவையொட்டி அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா இரவு நடைபெற்றது . திருக்கழுகுன்றம் பேரூராட்சித் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் நிறைவு விழாவில் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமிகாந்தன் பாரதி தாசன், செயல் அலுவலா் மேகவண்ணன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT